திரௌபதி 2 படப்பிடிப்பு நிறைவு
செப் 24, 2025
Advertisement
மோகன் ஜி இயக்கத்தில், ஜிப்ரான் வைபோதா இசையமைப்பில், ரிச்சர்ட் ரக்ஷனா இந்து சுதன், நட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் "திரௌபதி 2". சரித்திர காலப் படமான உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
“5 மாத எங்கள் குழுவினரின் கடுமையான அயராத உழைப்பு, உங்களை உறைய வைக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் உருவாகி வருகிறது. மும்பையில் ஆரம்பித்த #திரெளபதி 2 படப்பிடிப்பு அரியலூரில் நிறைவடைந்தது. டிசம்பர் மாதம் திரையில்.. ஈசனுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காக திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்து நன்றிக்கடன் செலுத்தியதாக மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட போது இந்த வருடத்தில் படம் வெளிவந்துவிடும் என்று அறிவித்துள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!