
உடைகளை வைத்து தரத்தை நிர்ணயிக்காதீர்கள்; நடிகைகளுக்கு எல்லை தெரியும்: ரைசா காட்டம்
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன், "பியார் பிரேமா காதல்" படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர், தற்போது மைலோ இயக்கத்தில் "நோவா" எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் வசனமே பேசாமல் உடல்மொழியால் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கிடையே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வந்தார் ரைசா வில்சன். கவர்ச்சி உடையால் சிலர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக ரைசா வில்சன் தெரிவிக்கையில், ""நடிகைகள் கவர்ச்சியான உடைகள் அணிந்தாலே விமர்சிக்கும் போக்கை கைவிடுங்கள். உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை நிர்ணயிக்க கூடாது. கவர்ச்சிக்கு எல்லைகள் உண்டு, அதனை யாருமே மீற மாட்டார்கள். அது நடிகைகளுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் வெளிநாட்டில் "பிகினி" அணிந்தாலும் கூட திட்டுவது இன்னும் கொடுமையானது. மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவள் நான். எனவே நீங்கள் சொல்லும் கவர்ச்சி உடைகள் எனக்கு சாதாரண உடை தான். உடைகள் விஷயத்தில் குறைகள் சொல்லாதீர்கள்"" எனத் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!