
பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள்
இந்த கண்டனங்களில் தமிழ் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் கருத்து கவனம் ஈர்த்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் பஹல்காமில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எழுதியிருப்பதாவது:
ஒரு காலத்தில் நானும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்து விட்டேன். அதேவேளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.
நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். என்று எழுதியுள்ளார்.
ஆண்ட்ரியாவின் இந்த கருத்தை வரவேற்று பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!