மே 13க்கு தள்ளிப்போன சிவகார்த்திகேயனின் டான்
மார் 02, 2022
Advertisement
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள "டான்" படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இவர்களுடன் கவுதம் மேனன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, காளி வெங்கட், சிவாங்கி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியது . இந்த படம் மார்ச் 25-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் மார்ச் 25 இல் வெளியாக உள்ளதால் மே மாதம் தள்ளிப்போகும் தகவல்கள் வெளியானது .
இந்நிலையில் வருகின்ற மே 13 ஆம் தேதி டான் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபோவமாக இன்று அறிவித்துள்ளனர். இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளனர் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!