அம்மாவை விட கூகுளுக்கு தெரியுமோ : வர்ஷா கிண்டல்
ஜூன் 05, 2021
Advertisement
டிஜிட்டல் உலகத்தில் ஏதாவது ஒரு விஷயத்தைத் தேட வேண்டும் என்றால் உடனே பலரும் அணுகுவது கூகுள் இணையதளத்தை. அதில் இல்லாத தகவல்களே என்று சொல்லுமளவிற்கு பலரும் தேடுவார்கள், அவற்றில் சில தவறான தகவல்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
சமீபத்தில் கூட "இந்தியாவின் அசிங்கமான மொழி" என்று கூகுளில் தேடும் போது "கன்னடம்" என வருகிறது என கன்னட மக்கள் கொதித்து கண்டனம் தெரிவித்தார்கள். பின்னர் கூகுளே தாங்கள் அதைத் திருத்திவிட்டோம், தவறுக்கு வருந்துகிறோம் என கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மன்னிப்பு கேட்டார்கள்.
இப்போது "96" பட நடிகையான வர்ஷா பொல்லம்மா கூகுளை தனது சொந்த விவகாரம் ஒன்றில் கிண்டலடித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார் வர்ஷா. அப்போது ஒரு ரசிகர் உங்கள் வயது 25 என கூகுள் சொல்கிறது என்றார். அதற்கு பதிலளித்த வர்ஷா எனது வயது 24 தான், நான் 1996ம் ஆண்டு பிறந்தேன், ஆக எனது வயது 24. ஆனால், எனது அம்மாவை விட கூகுளுக்கு அது நன்றாகத் தெரியும் என நினைக்கிறேன்,” எனக் கிண்டலடித்துள்ளார்.
வர்ஷாவின் வயதைச் சரி செய்யுமா கூகுள் ?, என்ற கவலை அவரது ரசிகர்களுக்கு வரலாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!