
ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் 1163 தியேட்டர்கள் உள்ளன. இதில் ஜனவரி 9ம் தேதி பெரும்பாலான தியேட்டர்களில் ஜனநாயகன் திரையிடப்பட உள்ளது. மறுநாள் பராசக்தி வெளியாகும்போதும் இந்த எண்ணிக்கை குறையும். ஜனவரி 10ம் தேதி பராசக்தி 500 தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் மாற வாய்ப்பு.
தமிழகத்தில் இருக்கும் தியேட்டர்களை இந்த 2 படங்களுமே மொத்தமாக அள்ளிக்கொள்வதால் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகாமல் ஒதுங்கிக்கொண்டன. பொங்கலுக்கு பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப், சிரஞ்சீவின் மனசங்கர் வரபிரசாத் காரு படங்கள் வர உள்ளது. இரண்டுமே தெலுங்கு படங்கள் என்பதால் இந்த படங்களுக்கு சொற்ப தியேட்டர்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு. ஜனநாயகன், பராசக்தி படங்களின் முதல்காட்சி டிக்கெட் விலை எவ்வளவு என்பதே இப்போது பலரின் கேள்வி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!