இயக்குனர் மோகன் காந்தி ராமன் காலமானார்
மே 26, 2021
Advertisement
பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்தி ராமன். இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்த இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் பணியாற்றினார். அதன்பிறகு செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன், மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கில்லாடி மாப்பிள்ளை என்ற படத்தில் பாண்டியராஜனின் தந்தையாக நடித்துள்ளார். பெப்சி அமைப்பின் தலைவராக சில காலம் பணியாற்றி உள்ளார்.
89 வயதான மோகன் காந்தி ராமன் முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஓமாந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!