இயக்குனர் ஹரியின் ‛குட்லக் ஸ்டூடியோஸ்: சூர்யா துவக்கி வைத்தார்
Advertisement
Advertisement
இயக்குனர் ஹரியின் ‛குட்லக் ஸ்டூடியோஸ்: சூர்யா துவக்கி வைத்தார்
ஏப் 02, 2023
அ நிறம் | அளவு
Advertisement
இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி ஆகியோர் "குட்லக் ஸ்டூடியோஸ்" என்ற புதிய ஸ்டூடியோ ஒன்றை துவக்கியுள்ளனர். திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஸ்டூடியோவை நடிகர் சூர்யா, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மனோ தங்கராஜ், இயக்குனர் ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன், மாமனார் நடிகர் விஜயகுமார், உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
40 வருட பாரம்பரியமான நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான ‛குட்லக் ப்ரிவியுவ்" திரையரங்கம் தான் இப்போது குட்லக் ஸ்டூடியோஸ் ஆக சாலிகிராமத்தில் உதயமாகியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!