
விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர்
செப் 22, 2023
Advertisement
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் "விடுதலை". இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. தற்போது விடுதலை 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பிரதானமாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. இதில் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட ப்ளாஷ் பிளாக் காட்சிகளில் சில முக்கிய நடிகர்கள் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இப்போது நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…