விஷால் ஜோடியாக தேவி 2 பட நடிகை டிம்பிள் ஹயாதி
மே 06, 2021
Advertisement
"சக்ரா" படத்திற்குப் பிறகு விஷால் தற்போது நடித்து வரும் படம் "எனிமி". இந்தப் படத்தை அடுத்து விஷால் நடிக்கும் அவரது 31வது படம் இன்று(மே 6) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. "எது தேவையோ அதுவே தர்மம்" என்ற குறும்படத்தை இயக்கிய து பா சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து வெளிவந்த "தேவி 2" படத்தில் இவர் ஒரு முக்கியமில்லாத கதாபாத்திரத்தில் நடித்தவர். 2017ல் வெளிவந்த "கல்ப்" என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது "கில்லாடி, ஆர்ஆர்ஆர்" ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக விஷால் பிரபலமான நடிகைகளுடன்தான் ஜோடி சேர்ந்து நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வளரும் நடிகையை அவருடைய ஜோடியாக நடிக்க தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது..

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!