
துருவ நட்சத்திரம் விரைவில் ஒளி வீசுமா ?
இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே இயக்குனர் கவுதம் மேனன், விக்ரம் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, “விரைவில் நட்சத்திரங்கள் சீரமைக்கப்படும்,” எனப் பதிவிட்டுள்ளார் கவுதம்.
நீண்ட காலமாக கிடப்பில் இருந்த "துருவ நட்சத்திரம்" படம் விரைவில் ஒளி வீசும் என ரசிகர்கள் மகிழ்ந்துள்ளார்கள். விக்ரம் தற்போது "பொன்னியின் செல்வன்" படத்தை முடித்துவிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துடன் "துருவ நட்சத்திரம்" படத்திலும் சேர்த்து நடித்துக் கொடுப்பார் எனத் தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!