
‛துருவ நட்சத்திரம் ரிலீஸ் : மன்னிப்பு கேட்ட கவுதம் மேனன்
ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கவுதம் மேனன் தர வேண்டிய ரூ.2.40 கோடி பணத்தை திருப்பி செலுத்தாததால் படம் வெளியாகவில்லை. இன்று காலைக்குள் அந்த நிறுவனத்திற்கு ரூ.2 கோடி பணத்தை தர சென்னை ஐகோர்ட் கெடு விதித்து இருந்தது. ஆனால் அவர் செலுத்தவில்லை. இதனால் படம் இன்று வெளியாகவில்லை என கவுதம் மேனன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மன்னிச்சுருங்க... "துருவ நட்சத்திரம்" படத்தை இன்று வெளியிட முடியவில்லை. எங்களால் முயன்ற முயற்சிகளை செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. இந்த படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. அதுவே எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தை ரிலீஸ் செய்வோம்,"" என தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!