
ரஜினியின் ‛ஜெயிலர் 2விற்கு வழிவிட்டு ஒதுங்கிய தனுஷின் ‛ஓம்
இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்ட அறிக்கை : ‛‛பல ஆண்டுகளாக நாம் வியந்து பார்த்த ரஜினிகாந்த்தின் ‛ஜெயிலர் 2" படம், ஓம் படத்திற்கு ஒருநாள் முன்னதாக அக்., 15ல் வெளியாகிறது. அவர் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதையின் காரணமாக எங்களது ஓம் பட வெளியீட்டை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதேநேரத்தில் இந்தாண்டு தீபாவளிக்கும் எங்கள் படம் வெளியாகாது. காரணம் அதேதேதியில் சூர்யாவின் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலோடும் ஒருவருக்கொருவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!