
ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்
டிச 07, 2025
Advertisement
கடந்த 2005ம் ஆண்டில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், குணால் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் "தேவதையை கண்டேன்". அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‛3, மயக்கம் என்ன, அம்பிகாபதி" ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!