மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷின் 51வது படம்
டிச 07, 2023
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் .ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அரசியல் மாபியா கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் மும்பையில் தொடங்கவுள்ளனர். படப்பிடிப்பின் போதே இந்த படத்தின் காட்சிகளைக் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!