
லெனின் பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்?
நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களில் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வலுவாக மாற்றுவதற்காக அங்குள்ள முன்னணி இயக்குனர்களான வெங்கி அட்லூரி, சேகர் கம்முலா ஆகியோரின் டைரக்ஷனில் நடித்தார். இரண்டுமே தமிழை விட தெலுங்கில் அவருக்கு வெற்றியை தந்தன. இந்த நிலையில் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் டைரக்ஷனில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிப்பில் வெளியான "லெனின்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை முரளி கிஷோர் அப்புரு என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும், அதற்கு தனுஷ் பாசிட்டிவான பதிலை கூறியதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு செய்தி பேசப்பட்டு வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!