அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கப் போகிறாரா தனுஷ்?
ஜூன் 23, 2021
Advertisement
"அசுரன், கர்ணன்" என இரண்டு படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் தனுஷிற்கான மார்க்கெட் நிலவரம் தமிழ் சினிமாவில் நன்றாகவே உயர்ந்தது. நல்ல வேளையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான "ஜகமே தந்திரம்" படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படி தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் உயர்ந்த தனுஷின் மார்க்கெட்டை அப்படம் நன்றாகவே பதம் பார்த்திருக்கும்.
"ஜகமே தந்திரம்" படம் ஓடிடியில் வெளியானாலும் அதன் தோல்வியையும், கடுமையான விமர்சனங்களையும் மறைக்க தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
"ஜகமே தந்திரம்" படம் ஓடிடி தளத்தில் வெளியான ஜுன் 18ம் தேதி, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியானது.
அடுத்ததாக தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள "நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்கச் செல்வதற்கு முன்பாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில நாட்கள் நடித்தார். தற்போது அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. அடுத்தடுத்து மூன்று படங்களில் தனுஷ் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!