தனுஷ் 43, பாடல் காட்சி படப்பிடிப்பு நிறைவு
ஜன 12, 2021
Advertisement
கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்முருதி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது.
தனுஷின் 43வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சி ஒன்றைப் படமாக்குவதுடன் துவங்கியது. "ரௌடி பேபி" பாடலுக்கு நடனம் அமைத்த ஜானியின் நடன இயக்கத்தில் அப்பாடல் படமாக்கப்பட்டது.
விவேக் எழுதி, தனுஷ் பாடிய அந்தப் பாடல் ஒரு அதிரடியான பாடலாக படமாக்கப்பட்டுள்ளது என்கிறார் நடன இயக்குனர் ஜானி. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் தலைப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தனுஷ் நடித்து முடித்துள்ள "ஜகமே தந்திரம், கர்ணன்" ஆகிய படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவற்றின் அறிவிப்பும் அடுத்த சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!