30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி
ஏப் 29, 2025
Advertisement
1995ம் ஆண்டு வெளிவந்த "தொட்டாசினிங்கி" படத்தின் மூலம் தேவயானியை தமிழில் அறிமுகப்படுத்தியவர் கே.எஸ் அதியமான். தற்போது கே எஸ் அதியமானின் உதவியாளர் சிவா ஆறுமுகம் இயக்கி உள்ள "நிழற்குடை" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.எஸ் அதியமானுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தேவயானி நன்றி தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது : என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் "காதல் கோட்டை" என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான்.
அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். என்றார்.
இந்த படத்தை தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரித்துள்ளார். விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, தர்ஷன் சிவா, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் . வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…