தேவரா - சுட்டாமலே : தெலுங்கில் அனிருத்தின் முதல் 100 மில்லியன் பாடல்
செப் 04, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான "3" படத்தில் இடம் பெற்ற "ஒய் திஸ் கொலைவெறி" பாடல்தான் இந்திய சினிமாவில் முதன் முதலில் 100 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்து சாதனை படைத்தது. 2012ம் ஆண்டில் அந்தப் பாடல் இந்தியத் திரையுலகத்திலும், யு டியுப் வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயம் துவங்கக் காரணமாக அமைந்தது.
அதற்குப் பின் அனிருத் இசையில் வந்த சில பாடல்கள் 100 மில்லியனைக் கடந்த பாடல்களாகவும் உள்ளன. “அரபிக்குத்து, வாத்தி கம்மிங், டானு டானு, காவாலா, வெறித்தனம், செல்பி புள்ள, தாய் கிழவி, செல்லம்மா, மாரி தர லோக்கல், மேகம் கறுக்காதா, ஆளுமா டோலுமா, குட்டி ஸ்டோரி, டிப்பம் டப்பம், ஊதுங்கடா சங்கு, பத்தல பத்தல, சொடக்கு மேல, டூ டூ டூ, ஜலபுல ஜங்கு,” ஆகிய பாடல்கள் அனிருத்தின் 100 மில்லியன் பாடல்கள்.
ஹிந்தியில் "ஜவான்" படத்தின் மூலம் அறிமுகமானார் அனிருத். அந்தப் படத்தில் இடம் பெற்ற "ஜிண்டா பண்டா, சலேயா, நாட் ராமய்யா வஸ்தாவய்யா,” ஆகிய மூன்று பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தன. இவற்றில் "சலேயா" பாடல் 400 மில்லியனைக் கடந்த ஒரு பாடல்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த "அஞ்ஞாதவாசி" படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறாமல் போனது. அடுத்து "ஜெர்சி, கேங் லீடர்" ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அவற்றின் பாடல்களால் தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கில் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் "தேவரா 1" படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான "சுட்டாமலே" பாடல் கடந்த மாதம் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. தெலுங்கில் அனிருத்தின் முதல் 100 மில்லியன் பாடலாகவும் அது அமைந்துள்ளது. சிங்களப் பாடல் ஒன்றின் "காப்பி" என அப்பாடல் பற்றி விமர்சனம் வந்தாலும் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!