விஜய் சேதுபதி விலகிய படத்தில் தேவ் பட்டேல்
ஜன 10, 2022
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகயிருந்த படம் 800. கிரிக்கெட் விளையாட்டில் அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்த தலைப்பில் அப்படம் உருவாக இருந்தது. இதில் விஜயசேதுபதி நாயகனாக நடிக்கயிருந்தார். ஆனால் முத்தையா முரளீதரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது வேடத்தில் விஜயசேது பதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தன. அதையடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார் விஜயசேதுபதி.
இந்தநிலையில் தற்போது 800 படத்தில் ஸ்லம்டாக் மில்லியனர், ஹோட்டல் மும்பை, சாப்பி என பல படங்களில் நடித்துள்ள பிரிட்டன் நடிகர் தேவ் பட்டேல் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேவ் பட்டேல் தற்போது மங்கிமேன் என்ற ஆங்கில படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!