டிமான்டி காலனி 2 படப்பிடிப்பு ஆரம்பம்
டிச 01, 2022
Advertisement
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடிக்க 2015ல் வெளிவந்த பேய்ப் படம் "டிமான்டி காலனி". தனது அறிமுகப் படத்திலேயே யார் இவர் என கவனிக்க வைத்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த "இமைக்கா நொடிகள்" படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த "கோப்ரா" படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தது.
அடுத்ததாக "டிமான்டி காலனி" படத்தின் இரண்டாம் பாகப்படப்பிடிப்பை நேற்று முதல் ஆரம்பித்துள்ளார் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் நடித்த அருள் நிதி கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அருள்நிதி நடித்து இந்த ஆண்டில் "டி பிளாக், தேஜாவு, டைரி" ஆகிய படங்கள் வெளிவந்தன. "ராட்சசி" படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வரும் அருள்நிதி அடுத்து "டிமான்டி காலனி 2" படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்படத்தை அருள்நிதியே தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் படத்தின் இயக்குனரான ஞானமுத்து மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!