நடன இயக்குனர் கூல் ஜெயந்த் காலமானார்
நவ 10, 2021
Advertisement
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
நடன இயக்குனர்கள் ராஜு சுந்தரம், பிரபுதேவா நடனக்குழுவில் இருந்தவர் ஜெயராஜ் எனும் கூல் ஜெயந்த். குரூப் டான்சராக இருந்தவர் ‛காதல் தேசம்" படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். சென்னை மாம்பலத்தில் வசித்து வந்த இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலையில் மரணம் அடைந்தார். மாலையில் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
மறைந்த கூல் ஜெயந்த்திற்கு அவருடன் பணியாற்றி நடன இயக்குனர்களும், நடன கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!