
அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் கூலி
பிரிமியர் காட்சிகள் மற்ற காட்சிகளுக்கான முன்பதிவுகள் ஆகியவை சேர்த்து தற்போது அமெரிக்க வசூல 3.9 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடியே 18 லட்சம்.
அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளின் மூலம் அதிக வசூலைப் பெற்ற படங்களில் "கூலி" நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அக்காட்சிகளின் மூலம் மட்டும் 3.04 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இதற்கு முன்பாக "கல்கி 2898 ஏடி" படம் 3.9 மில்லியன் யுஎஸ் டாலர், "ஆர்ஆர்ஆர்" 3.5 மில்லியன், "புஷ்பா 2" 3.34 மில்லியன் யுஎஸ் டாலரைப் பெற்றுள்ளன. "தேவரா" படம் 2.85 மில்லியனை வசூலித்துள்ளது.
முதல் 5 இடங்களில் 4 தெலுங்குப் படங்களும் ஒரே ஒரு தமிழ்ப் படமும் பட்டியலில் உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!