
கட்-அவுட்டிற்கு ஆடு பலி கொடுத்த விவகாரம் - ரஜினி மீது போலீசில் புகார்
இந்நிலையில் தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் போஸ்டர் வெளியானபோது அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போஸ்டர் முன்பு கொடூரமாக ஒரு ஆட்டை பலி கொடுத்து அந்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பெண்கள், குழந்தைகள் செல்லும் நடுரோட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து நடிகர் ரஜினி இதுவரை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல்பாடு இதை ஆதரிப்பது போலவே உள்ளது.
கோயில்களில், கறிக்கடைகளில் ஆடு வெட்டுவதையே ஒதுக்குப்புறமாக வைத்து செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகரின் கட்-அவுட்டுக்கு இப்படி நடுரோட்டில் ஆட்டை பலி கொடுத்தது கொடூரமானது. அதனால் இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!