
‛காபி வித் காதல் அக்., 7ல் ரிலீஸ்
செப் 05, 2022
Advertisement
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காபி வித் காதல்". ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலும், காமெடியும் கலந்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு, மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதிலும் ‛மைக்கேல் மதன காமராஜன்" படத்தில் இடம் பெற்ற ரம் பம் பம் ஆரம்பம் பாடலை மீண்டும் ரீ-கிரியேட் செய்து வெளியிட்டனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அக்.,7ல் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி தமிழகத்தில் வெளியிடுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!