சினிமா எடிட்டர் உதய சங்கர் காலமானார்
நவ 14, 2024
Advertisement
சமீபத்தில் ‛கங்குவா" படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப் மரணித்த நிலையில் இப்போது மற்றொரு தமிழ் பட எடிட்டர் காலமானார். அவரது பெயர் உதய சங்கர். உடல் நலக்குறைவால் இவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஆர்கே செல்வமணியின் ஆஸ்தான எடிட்டர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‛செம்பருத்தி" படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து அவரின் ராஜ முத்திரை, மக்கள் ஆட்சி, அரசியல், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களிலும் பணியாற்றினார். இதுதவிர பொண்டாட்டி ராஜ்ஜியம், ராஜாளி, புருஷன் பொண்டாட்டி என ஏராளமான படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
இவரது சொந்த ஊர் சேலம். அவரது இறுதிச்சடங்கு நாளை அங்கு நடைபெற உள்ளது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!