
நடிகரான நடன இயக்குனர்
ஜாய் மதியுடன் ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ், ஈஸ்வர் சந்திரபாபு, ஷர்மிளா, யாசர், தர்ஷன், நதீம், முல்லை, கோதண்டம், ஜெமினிபாலு உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன் இசையையும் கவனிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் எஸ்.ஜே.திவாகர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். அப்படி விவசாயம் செய்துவரும் கதாநாயகனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையில் முறைப்பெண்ணின் காதல், இவரை விரும்பும் இன்னொரு பெண், கோவில் திருவிழா, கிராமத்தின் முன்னேற்றம் என பல்வேறு பிரச்சனைகளை கதாநாயகன் சமாளிக்க போராடும் நிலையில் ஒரு கொலை பழியும் நாயகன் மீது விழுகிறது.
இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நாயகன் வாழ்வில் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. இப்படி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் படத்தை இயக்கி உள்ளேன். என்கிறார் இயக்குனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!