கல்வி அறக்கட்டளை தொடங்கும் சிரஞ்சீவி
மார் 20, 2026
Advertisement
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே தனது பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதில் ரத்த வங்கி, கண் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதை மையமாகக் கொண்ட ஒரு புதிய அறக்கட்டளையை தொடங்க இருப்பதாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை செய்து வரும் முயற்சிகள் தனக்கு உத்வேகம் கொடுத்ததாகவும், தானும் சூர்யாவை போலவே இலவச கல்வியை வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டுமின்றி தேவைப்படும் எல்லா மாநிலங்களிலும் எதிர்காலத்தில் விரிவுபடுத்தவும் தான் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ள சிரஞ்சீவி, இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடப்போகிறாராம்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!