12 வேடங்களில் நடிக்கும் சேத்தன் சீனு
மார் 15, 2023
Advertisement
"கருங்காலி" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பிஎம்கே இண்டர்நேஷனல் மற்றும் சிசி புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் "பீஷ்ம பருவம்"படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ள சேத்தன் சீனு புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள பான் இந்திய படமாக உருவாகியுள்ள பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இன்னொரு பக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்திற்காக போராடிய 12 சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையப்படுத்தி ஆந்தாலாஜி படமாக உருவாகி வரும் "ஆக்டர்"படத்திலும் நடித்து வருகிறார். இதில் வேலு நாச்சியார் உட்பட 12 கதாபாத்திரங்களிலும் சேத்தன் சீனுவே நடிக்கிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!