
ப்ரோ படத்தின் டீசர் அப்டேட்
ஜூன் 29, 2023
Advertisement
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் ‛வினோதய சித்தம்". தற்போது இந்த படத்தை தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து இன்று(ஜூன் 29) மாலை 5.04 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!