
புற்றுநோய் பாதிப்பு : தொடர் சிகிச்சையில் உமா
2006ம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்து கொண்ட உமா, அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் உமா, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்த செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
தற்போது அவர் மார்பக புற்றுநோய்க்கான 2 வது கட்டத்திற்கு வந்து விட்டார். கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை பெற்று வருகிறார். தான் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டுள்ள உமா தனது பதிவில் "நம்பிக்கையுடன் போராடி வருகிறேன், சவாலான நாட்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருகிறேன். என் மீது அன்பும் ஆதரவும் காட்டி வரும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!