
கோட், கர, அமரன் படங்களை முந்திய பிளாஸ்ட்
ஜூலை 02, 2026
Advertisement
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில், சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் "பிளாஸ்ட்" . இந்த படம் உலகளவில் ரூ. 75 கோடி வசூலை கடந்தது. கடந்த வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் மூலம் உலகளவில் 4.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் இருந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான தமிழ் படங்களின் டாப் 10 பார்வையாளர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருந்த அமரன், தி கோட், கர ஆகிய படங்களின் முதல் வார பார்வையாளர்களை கடந்து பிளாஸ்ட் படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!