பிரின்ஸ் படத்தின் ‛பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது
Advertisement
Advertisement
பிரின்ஸ் படத்தின் ‛பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது
செப் 02, 2022
அ நிறம் | அளவு
Advertisement
டாக்டர், டான் படங்களை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலுக்கு அதிரடி நடனம் ஆடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!