வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ?
ஜூன் 12, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். தற்போது விஜய்யின் "ஜனநாயகன்" படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.
இந்நிலையில் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆன வரிசையில் இயக்குனர் வினோத்தும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான ராஜூ நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!