
‛பத்தா படம்... மகளே பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா?
குறிப்பாக 80-களின் இசை உலகை இந்த பாடல் கொண்டு வந்துள்ளது. "மகளே" பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேத்தாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்துள்ளது. இதனால் பத்தா படம் அப்பா, மகள் பாசத்தை.அடிப்படையாக கொண்ட கதை என தெரிகிறது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!