பீஸ்ட் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜூன் 22, 2021
Advertisement
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார் . நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று(ஜூன் 22). இதையொட்டி நேற்று படத்தின் தலைப்பான ‛பீஸ்ட்" என்பதை பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்தனர். கையில் துப்பாக்கி ஏந்திய விஜய்யின் இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். நேற்று மாலை முதலே பீஸ்ட் மற்றும் விஜய் பிறந்தநாள் தான் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மற்றுறொரு போஸ்டரை நேற்று இரவு வெளியிட்டனர். அதிலும் கையில் துப்பாக்கி, வாயில் தோட்டோ என ஸ்டைலாக இருக்கிறார் விஜய். பின்னணியில் ஹெலிகாப்டர்கள் பறந்து வருகின்றன. இதை பார்க்கும் போதும் இது ஒரு வகையான மாஸான அதிரடி படமாக இருக்கும் என தெரிகிறது. விஜய் பிறந்தநாளோடு பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த இரு போஸ்டர்கள் வெளியீட்டால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!