
விருது பட நடிகராக்கிட்டாங்க : அப்புக்குட்டி
இதுகுறித்து அப்புகுட்டி கூறியிருப்பதாவது: ‛‛அழர்சாமியின் குதிரை படத்துக்குப் பிறகு காமெடியனாக நடிக்கிறதா, ஹீரோவா நடிக்கிறதா என்ற குழப்பம் இருந்தது. என்னால் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. அதனால் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து தெடர்ந்து நடித்தேன்.
தேசிய விருது கிடைத்ததால் விருதுக் கதைகளோடவே என்னைத் தேடி வருகிறார்கள். "வாழ்க விவசாயி", "ஜீவகாருண்யம்", "ஆ.கன்னியப்பன்", "பிறந்த நாள் வாழ்த்துகள்" படங்களில் அப்படியான கதைகள்தான். விருதுகள் வாங்குவது பெரிய சந்தோஷம்தான். அதைவிட, காமெடி ஹீரோவாக பெயர் வாங்கவே விரும்புகிறேன். அப்படி யாரும் என்னைப் பயன்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. சுசீந்திரன் சார் மாதிரி என் நடிப்பை முழுசா வெளிக்கொண்டு வர்ற ஒரு இயக்குநர் வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!