ஜூலை 25ல் ‛அவதார் 3 டிரைலர்
ஜூலை 22, 2025
‛டெர்மினேட்டர், டைட்டானிக்" போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டை மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜேம்ஸ் கேமரூன். 2009ல் ‛அவதார்" எனும் படத்தின் மூலம் புதிய உலகத்தை காண்பித்து பிரமிக்க வைத்தார். வசூலிலும் இந்த படம் பட்டையை கிளப்பியது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. ஏற்கனவே அவதார் 2 வான ‛அவதார் தி வே ஆப் வாட்டர்" படம் 2022ல் வெளியானது. முதல்பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் உலகளவில் வசூலை குவித்தது.
இதன் மூன்றாம் பாகமான ‛அவதார் - தி பயர் அண்ட் ஆஷ்" படம் தற்போது உருவாகி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்குகிறார். முதல் இரு பாகங்களில் நடித்தவர்களே இதிலும் தொடருகிறார்கள். அவதார் 3 படம் இந்தாண்டு டிசம்பர் 19ல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் டிரைலரை வருகிற ஜூலை 25ம் தேதி வெளியிடுகின்றனர். அன்றைய தினம் ஹாலிவுட் படமான ‛தி பென்டாஸ்டிக் 4" உலகளவில் ரிலீஸாகிறது. இந்த படத்தின் இடைவேளையின்போது ‛அவதார் 3" படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது. மேலும் படத்தின் வில்லனான வராங் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!