
கேப்டன்-ஆன ஆர்யா
நவ 18, 2021
Advertisement
நடிகர் ஆர்யா நடிப்பில் இந்தாண்டு டெடி, சார்பட்டா, அரண்மனை 3 ஆகிய மூன்று படங்கள் வெளியாகி, மூன்றுமே வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் டெடி படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியால் மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஆர்யாவின் 33வது படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு இப்போது ‛கேப்டன்" என பெயரிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று(நவ., 18) வெளியாகி உள்ளது. இமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!