
ஆடி மாதத்தில் ஆடி கார் வாங்கிய அருண் ராஜா காமராஜ்
ஜூலை 29, 2022
Advertisement
பாடலாசிரியராக சினிமாவில் நுழைந்த அருண் ராஜா காமராஜ், அதையடுத்து பல படங்களில் நடித்தும், பாடியும் வந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தயாரித்த கனா என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக அவரது மனைவி இறந்ததால் சில காலம் சோர்வாக காணப்பட்ட அருண் ராஜா காமராஜ், அதிலிருந்து மீண்டு வந்து உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காருக்கு அருகே தன் தாயாருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதையடுத்து ஆடி மாசத்தில் ஆடி கார் வாங்கிய அருண் ராஜா காமராஜுக்கு அவரது திரையுலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!