
அருண் விஜய்யை இயக்கும் ஏ.எல். விஜய்
ஜூலை 19, 2022
Advertisement
ஓ மை டாக் படத்தை அடுத்து ஹரி இயக்கிய யானை படத்தில் நடித்தார் அருண் விஜய். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கிரீடம், தலைவா, தெய்வத்திருமகள், தலைவி உட்பட பல படங்களை இயக்கிய ஏ. எல். விஜய் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் அருண் விஜய் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் தொடங்குவதற்கு திட்டமிட்டு உள்ளார்கள் . இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே அருண் விஜய் நடத்துள்ள அக்னிச்சிறகுகள், பாக்ஸர் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!