
ரெட்ட தல டப்பிங்கை முடித்த அருண் விஜய்
அருள்நிதி நடித்த "டிமான்டி காலனி 2" படத்தை வெளியிட்ட பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இந்தப் படம். அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ள "ரெட்ட தல" படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமானது. கோவா, புதுச்சேரி, தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
தற்போது இந்தப் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அருண் விஜய் முடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!