ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஓகே சொன்ன இளையராஜா
மார் 07, 2022
Advertisement
இசை ரசிகர்களை தங்களது மயக்கும் இசையால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு இருவருமே இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நிலையில் துபாயில் உள்ள ரஹ்மானின் இசை ஸ்டுடியோவுக்கு இளையராஜா சென்றார். இதுப்பற்றி ரஹ்மான் குறிப்பிடும்போது, ‛‛"பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு மேஸ்ட்ரோவை(இளையராஜா) வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவுக்காக அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்" என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, ‛‛ரஹ்மான் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்"" என்றார்.
ஒருகாலத்தில் இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றினார் ரஹ்மான். இன்று ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்று தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!