
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிம்பு புதிய கூட்டணி ?
இருந்தாலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் தீவிர முயற்சியில் அவர் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் சொன்ன கதை ஒன்றைக் கேட்ட சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளதாம். சிம்பு தற்போது "பத்து தல" படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முருகதாஸ் இயக்கும் படம் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக சில படங்கள் ஆரம்ப கட்ட நிலையில் வந்து பின்னர் டிராப் ஆகியுள்ளன. எனவே, இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நடக்கும் வரையில் எதுவும் உறுதி இல்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!