மீண்டும் தமிழுக்கு வரும் ‛அப்புச்சி கிராமம் ஆனந்த்
நவ 16, 2022
Advertisement
2014ம் ஆண்டு வெளியான அப்புச்சி கிராமம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வி.ஐ.ஆனந்த். அதன்பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு சந்தீப் கிஷன் நடித்த டைகர், நிகில் சித்தார்த்தா நடித்த எக்கடிக்கு போதாவு சின்னவாடா, அல்லு சிரிஷ் நடித்த ஒக்க ஷணம், ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படங்களை இயக்கினார்.
தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் "ஊரு பேரு பைரவகோனா" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக பெரிய பட்ஜெட்டில் இது உருவாகிறது. தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஆனந்த்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!