ஆஸ்கர் விழாவில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம்
மார் 11, 2024
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து 2022ம் ஆண்டு வெளிவந்த படம் "ஆர்ஆர்ஆர்". கடந்த வருடம் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜனல் பாடல் என்ற விருதை "நாட்டு நாட்டு" பாடலுக்காக வென்றது. ஹாலிவுட் கலைஞர்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்த ஆண்டிற்கான 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சினிமாவுக்காக உலகம் முழுவதும் ஸ்டன்ட் கோஆர்டினேட்டர்ஸ், ஸ்டன்ட் பர்பார்மெர்ஸ் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் சில முக்கிய திரைப்படங்களின் ஸ்டன்ட் காட்சிகள் அடங்கிய வீடியோ மான்டேஜ் ஒன்றை வெளியிட்டார்கள். அதில் "ஆர்ஆர்ஆர்" படத்தின் சண்டைக் காட்சிகள் சில வினாடிகள் இடம் பெற்றன.
அந்த வீடியோவைப் பகிர்ந்து ஆர்ஆர்ஆர் குழு, “மீண்டும், எங்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியம். சினிமாவில் உலகின் மிகச் சிறந்த ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இடம் பெற்ற வீடியோவில் "ஆர்ஆர்ஆர்" காட்சிகளும் இடம் பெற்றது மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!