அமெரிக்காவில் 700 தியேட்டர்களில் அண்ணாத்த ரிலீஸ்
அக் 27, 2021
Advertisement
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் "அண்ணாத்த". தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்கான வியாபாரம் பெரிய அளவில் வர ரஜினிகாந்த் தான் காரணம். அவரது "சிவாஜி" படம் முதல் இது வளர்ந்து நிற்கிறது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் "நார்மல்" நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் "அண்ணாத்த" படம் மக்களை இன்னும் அதிக அளவில் தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் "அண்ணாத்த" தமிழ்ப் படம் 416 தியேட்டர்களில் திரையிட உள்ளார்கள். இதன் தெலுங்கு டப்பிங்கான "பெத்தன்னா" 261 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. சிங்கப்பூரில் 23 தியேட்டர்களில் திரையிடப்ட உள்ளது. இது இன்றைய நிலவரம். அடுத்த சில நாட்களில் இன்னும் கூடலாம்.
வெளிநாட்டு உரிமையை கியூப் சினிமா நிறுவனம் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!