
கொரில்லா உடன் நடித்த அஞ்சலி
செப் 07, 2023
Advertisement
அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஈகை. இது அவரது ஐம்பதாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி. அதையடுத்து சென்னை திரும்பி உள்ள ஈகை படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. ஈகை படம் தவிர ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!