
அடுத்தடுத்து நான்கு ஹிட் படங்களில் அனிருத்
மேலே குறிப்பிட்ட நான்கு படங்களுக்கும் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அனிருத், “2022ம் ஆண்டு ஆரம்பமானதும், இதை எப்படி கடந்து போகப் போகிறோம் என நினைத்தேன். ஏப்ரல் 13 முதல் ஜுன் வரையில் எங்களுக்கு நான்கு வெளியிடுகள் இருந்தன. "பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், இப்போது "விக்ரம்". இந்தப் படங்களுக்கான இசைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுதான் இன்று நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கானது. எங்களது இசைக் கலைஞர்கள், குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்கள் அனைவருக்கும் எனது அன்புகள். நான் வழக்கமாகச் சொல்வது தான், இன்னும் செல்ல வேண்டும்,” எனக் குறிப்பிட்டு "விக்ரம்" படத்திற்கு இசையமைத்த மகிழ்ச்சியையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!